தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை பாஜக உடைத்துள்ளது - ராகுல் காந்தி
|தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை பாஜக உடைத்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை பாஜக உடைத்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஒரு இளைஞர் ஆயுதப் படையில் சேரும் வாய்ப்பை இழந்ததற்காக கண்ணீருடன் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்தியில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடக்கவில்லை.
2018-19: 53,431
2019-20: 80,572
2020-21: 0
2021-22: 0
4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அக்னிபத் திட்டத்தைக் கொண்டு வந்து தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று காத்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை பாஜக உடைத்து விட்டது. இந்த கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமரின் கர்வத்தை உடைக்கும்" என்று கூறியுள்ளார்.