< Back
தேசிய செய்திகள்
60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பாஜக அரசு 10 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளது - அனுராக் தாக்கூர் பேட்டி
தேசிய செய்திகள்

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பாஜக அரசு 10 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளது - அனுராக் தாக்கூர் பேட்டி

தினத்தந்தி
|
23 Jan 2024 4:18 PM IST

மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இமாச்சல பிரதேசத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

சிம்லா,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு பல காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசு நீண்ட காலமாக தங்கள் அரசியல் திட்டம் ஆக்கிவிட்டது. அயோத்தியில் இன்னும் முழுமையாக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாத கோவிலை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறி அழைப்பை மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், இதுபற்றி மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமீர்புரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாதவது,

60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாத பணியை பிரதமர் நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளது. செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது கட்சி தொண்டர்களின் தலையாய பொறுப்பு. நீண்ட நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக கட்சி இந்தியாவில் தொடங்கியது முதல் இன்று வரை சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வரும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க. மட்டுமே என்பது நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்