ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக பாஜக கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல்
|ராகுல் காந்தி, டிகே சிவக்குமார், சித்தராமையாவிற்கு எதிராக பாஜக கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு,
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கன்னட பத்திரிக்கைகளில்காங்கிரஸ் கட்சி, பஜகவின் ஊழல் விகித பட்டியல் என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தது. இதைத்தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மே 5 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நாளிதழில் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக பட்டியலிடப்பட்டுள்ளது.