சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்த பாஜகவினர் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
|தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர்,
அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன.
இதனிடையே, கடந்த பாஜக ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ரஞ்சித் சிங். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் உள்பட பாஜகவினர் 8 பேர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ரஞ்சித் சிங் உள்பட 8 பேரையும் பாஜக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. 8 பேரும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது.