< Back
தேசிய செய்திகள்
சர்க்கரை ஆலை வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை
தேசிய செய்திகள்

சர்க்கரை ஆலை வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
22 Jun 2024 11:21 AM IST

சர்க்கரை ஆலையை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சூறையாடிய பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராம்பூர்,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. காசிராம் திவாகர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சூறையாடியதாக வழக்கு தொடரப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. இதில் காசிராம் திவாகர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் காசிராம் திவாகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்