< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் இன்று பா.ஜ.க.தேர்தல் குழு கூட்டம்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் இன்று பா.ஜ.க.தேர்தல் குழு கூட்டம்

தினத்தந்தி
|
10 March 2024 9:10 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் 195 பேரின் பெயர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இன்று மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது .

டெல்லியில் இன்று இரவு நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தமிழக வேட்பாளர் பட்டியல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு பட்டியல் இறுதி செய்ய வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்