< Back
தேசிய செய்திகள்
135 பேரை பலியான பால விபத்து நடைபெற்ற மொர்பியில் பாஜக முன்னிலை
தேசிய செய்திகள்

135 பேரை பலியான பால விபத்து நடைபெற்ற மொர்பியில் பாஜக முன்னிலை

தினத்தந்தி
|
8 Dec 2022 10:55 AM IST

மொர்பி பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.

காந்திநகர்,

குஜராத்தின் மொர்பி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, குஜராத் தேர்தலில் மொர்பி தொகுதியில் பாஜக வேட்பாளராக கந்திலால் அம்ருத்யா போட்டியிட்டார்.

இந்நிலையில், குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மொர்பி தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் 10 ஆயிரத்து 156 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்