< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை..!
|2 March 2023 8:38 AM IST
திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 30 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக பின்தங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.பி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.