< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை; மந்திரி அரக ஞானேந்திரா பதில்
|16 Sept 2022 12:56 AM IST
பிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதாதளம்(எஸ்) உறுப்பினர் டி.ஏ.ஷரவணா கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளிக்கையில் கூறியதாவது:-
பிட்காயின் முறைகேட்டில் பணத்தை இழந்தவர்கள் யாரும் போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. இந்த பிட்காயின் விவகாரம் குறித்து இந்த சபையில் பல முறை விவாதம் நடைபெற்றது. அதற்கு நான் பதிலளித்துள்ளேன். உறுப்பினர், இதனால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதுபற்றி விவரங்களை அளித்தால் விசாரணை நடத்தப்படும். அமெரிக்க போலீசாரும் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்தவர்களோ அல்லது நமது நாட்டை சேர்ந்தவர்களோ அதில் ஈடுபட்டுள்ளதாக எந்த தகவலையும் அந்த போலீசார் கூறவில்லை. இந்த பிட்காயின் விவகாரத்தில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.