< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மகாத்மா காந்தி பிறந்த நாள்; ராஜ்காட்டில் ராகுல் காந்தி, அதிஷி மரியாதை
|2 Oct 2024 7:56 AM IST
டெல்லி முதல்-மந்திரியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று மலர்களை தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன்படி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று, டெல்லி முதல்-மந்திரியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று மலர்களை தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.