< Back
தேசிய செய்திகள்
பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா - கேரள அமைச்சரவை ஒப்புதல்
தேசிய செய்திகள்

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா - கேரள அமைச்சரவை ஒப்புதல்

தினத்தந்தி
|
30 Nov 2022 2:17 PM GMT

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ஆரிப் முகமது கானை நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கவர்னரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவர்னரை வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கேரள சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 5-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், முதல் நாளிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்