< Back
தேசிய செய்திகள்
உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைய இந்தியாவின் தலைமை முக்கியமானது - பில் கேட்ஸ்

Image Courtesy : ANI 

தேசிய செய்திகள்

உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைய இந்தியாவின் தலைமை முக்கியமானது - பில் கேட்ஸ்

தினத்தந்தி
|
6 Jun 2022 4:03 AM GMT

"வாழ்க்கை இயக்கம்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடியுடன், பில் கேட்ஸூம் கலந்து கொண்டார்.

புதுடெல்லி,

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சர்வதேச அளவில் "வாழ்க்கை இயக்கம்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் காணொளி மூலம் பிரதமர் மோடியுடன், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸூம் கலந்து கொண்டனர். "வாழ்க்கை இயக்கம்" என்ற புதுமுயற்சியை தொடங்கியதற்கு மோடிக்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் பேசிய பில் கேட்ஸ் கூறுகையில், "நமது உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதில் இந்தியாவின் தலைமை முக்கியமானது. பசுமையில்லா (கிரீன்ஹவுஸ்) வாயுக்களை அகற்ற, பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டாண்மை உட்பட அனைவருக்கும் தொழில்நுட்ப ஒத்துழைப்பும் தேவை " என தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசுகையில், "உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் இந்தியா ஆதரவாக நிற்கிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தில், 'வாழ்க்கை - சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை'யை உலகளாவிய இயக்கமாக மாற்ற உறுதிமொழி ஏற்போம்,'' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்