< Back
தேசிய செய்திகள்
அடிக்கடி தனிமையில் உல்லாசம்: மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்
தேசிய செய்திகள்

அடிக்கடி தனிமையில் உல்லாசம்: மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்

தினத்தந்தி
|
1 May 2024 9:03 AM IST

வாலிபர் ஒருவர் தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

பாட்னா,

பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானநிலையில் பெண்வீட்டில் வசித்து வந்தார். அப்போது சிக்கந்தரின் மனைவி இறந்தநிலையிலும் அவர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்தநிலையில் இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அனைவரும் அவர்களை விசாரித்துள்ளனர். அதில் மாமியாருடன் அந்த வாலிபருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.

இதனால் அங்கு பஞ்சாயத்து கூட்டப்பட்டு கிராம மக்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவ தொடங்கியுள்ளது. இந்திய சமூகத்தின் நிலைமை கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சீர்கெட்டு வருகிறது என்று வலைத்தளவாசிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்