மனைவி பெற்றோரின் வீட்டில் தங்கியதால் தனது அந்தரங்க உறுப்பை துண்டித்த கணவன்
|பீகாரில் மனைவி பெற்றோரின் வீட்டில் தங்கியதால் கோபமடைந்த கணவன் தனது அந்தரங்க உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதேபுரா,
பீகாரில் மனைவி பெற்றோர் வீட்டில் தங்கியதால் கோபமடைந்த கணவன் தனது அந்தரங்க உறுப்பை துண்டித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதேபுரா காவல் நிலையத்திற்குட்பட்ட ராஜ்னி நயநகர் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ராஜ்னி நயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா பாசுகி (வயது 25). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணா பஞ்சாபின் மண்டியில் தங்கி வேலை செய்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணா தனது குடும்பத்தினரை சந்திக்க ராஜ்னி நயநகர் வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி அனிதா தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். அவர் திரும்பி வருவதை தாமதப்படுத்தியதால் கோபமடைந்த கிருஷ்ணா, கூரிய ஆயுதத்தால் தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கண்ட உறவினர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கிருஷ்ணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணா மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக சில ஆதாரங்கள் கூறுகின்றன.