சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து...! களிமண்ணால் அடைத்த வாலிபர் கொடுஞ்செயலால் அதிர்ச்சி...!
|தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாட்னா
பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள டகருவா கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த பிற சிறுமிகளை அங்கிருந்து விரட்டி உள்ளார். மேலும், இந்த சிறுமியிடம் பேசி அவரை மட்டும் யாரும் இல்லாத இடத்துக்கு தனியே அழைத்துசென்றுள்ளார்.
அங்கு சென்றவர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், அதனை தடுக்க அங்கிருந்த களிமண் மற்றும் சேற்றை கொண்டு சிறுமியின் பிறப்புறுப்பில் தடவி ரத்தம் வழிவதை தடுத்துள்ளார்.
நெடுநேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராத நிலையில், சிறுமியின் பெற்றோர் சிறுமியுடன் விளையாடியவர்களிடம் விசாரித்தபோது ஒரு இளைஞர் அந்த சிறுமியை தனியே அழைத்துச்சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கூறிய இடத்துக்கு அக்கம் பக்கத்தாருடன் சிறுமியின் உறவினர்கள் சென்றபோது அங்கு சிறுமியும் அந்த இளைஞரும் இருப்பது தெரியவந்தது.
அதோடு அந்த இளைஞர் சிறுமிக்கு செய்துவந்த கொடுமையும் அறிந்த அவர்கள் தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பூர்ணியா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அமீர் ஜாவித் கூறியதாவது:-
"குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து உள்ளோம். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக விரைவான விசாரணை தொடங்கப்படும்" என்று கூறினார்.