< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகாரில் கள்ளச்சாரயம் குடித்து 21 பேர் பலி
|14 Dec 2022 6:57 PM IST
மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான பீகாரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது
பாட்னா,
மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான பீகாரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சாப்ரா, மஷ்ரக் மற்றும் இசுவாபூர் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 21 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்தே இறந்ததால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கடந்த வாரம், வைசாலி மாவட்டம் மஹ்னரில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேரும் இறந்த நிலையில், தற்போது மேலும் 21 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.