< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகார் கவர்னரின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து
|17 April 2023 6:57 PM IST
பீகார் மாநிலத்தில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயம் அடைந்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலத்தில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயம் அடைந்தனர்.
பாட்னாவில் இருந்து முசாபர்பூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பகவான்பூர் அருகே, கவர்னருடன் சென்ற தீயணைப்பு வாகனம், சாலைத் தடுப்புச் சுவரைத் தாண்டி, எதிரில் வந்த ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில், தீயணைப்பு வாகன ஓட்டுனர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹாஜிபூர் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.