< Back
தேசிய செய்திகள்
விபத்தில் ஒரு காலை இழந்ததால் 1 கி.மீ தூரம் தாவித்தாவி பள்ளிக்கு சென்றுவரும் சிறுமி! மாணவியை பாராட்டிய கலெக்டர்
தேசிய செய்திகள்

விபத்தில் ஒரு காலை இழந்ததால் 1 கி.மீ தூரம் தாவித்தாவி பள்ளிக்கு சென்றுவரும் சிறுமி! மாணவியை பாராட்டிய கலெக்டர்

தினத்தந்தி
|
25 May 2022 8:43 PM IST

பீகாரில் சீமா என்ற மாணவி சில வருடங்களுக்கு முன் விபத்தில் ஒரு காலை இழந்தாள்.

பாட்னா,

பீகாரில் சீமா என்ற மாணவி சில வருடங்களுக்கு முன் விபத்தில் ஒரு காலை இழந்தாள்.

இந்த நிலையில், அந்த மாணவி யார் துணையும் இல்லாமல், ஒற்றைக் காலில் குதித்து குதித்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த அறிந்த மாணவிக்கு உதவ பலர் முன் வந்தனர்.

தன்னம்பிக்கையை இழக்காத அந்த 10 வயது சிறுமி, தன் வீட்டிலிருந்து பள்ளி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தை ஒற்றைக் காலில் துள்ளி சென்று வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "நான் 4 ஆம் வகுப்பு படிக்கிறேன், என் வீட்டிலிருந்து பள்ளிக்கு உள்ள தூரத்தை நடந்தே செல்கிறேன்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அவளுக்கு உதவ பலர் முன் வந்த நிலையில், ஜமுய் மாவட்ட கலெக்டர் அவளது வீட்டிற்கு சென்று, சிறுமிக்கு ஒரு மூன்று சக்கர வண்டியை பரிசாக அளித்து அவளை பாராட்டி ஊக்கப்படுத்தினார். மேலும், சிறுமிக்கு செயற்கை கால் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

சீமா நக்சல்களால் பாதிக்கப்பட்ட பதேபூர் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்.சீமாவின் தந்தை கிரண் மஞ்சி ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாக வேறு இடத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்.

ஆனால், பல சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த சிறுமி, எதிர்காலத்தில் தான் ஒரு ஆசிரியையாக வேண்டும் என்ற கனவை கைவிடவில்லை.

அவருடைய மனஉறுதியை, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் நடிகர் சோனு சூட் வரை பலரும் சீமாவை பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்