< Back
தேசிய செய்திகள்
பீகார்; அடையாளம் தெரியாத நபர்களால் என்ஜினீயர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

பீகார்; அடையாளம் தெரியாத நபர்களால் என்ஜினீயர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
20 Aug 2023 3:44 PM IST

பீகாரில் என்ஜினீயர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் .

பாட்னா,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜிவ் குமார். இவர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து பவர் ஹவுஸ் சௌக் பகுதிக்கு சென்றார். பின் வீட்டிற்கு வரும் வழியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை வழி மறித்து அவரின் பெயரை கேட்டனர். அவர் பெயரை கூறியதும் திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராஜிவ் குமாரை சுட்டனர்.

இதில் தோட்டா அவரது மார்பு பகுதியில் பாய்ந்தது. அவர் சுருண்டு விழுந்தார். உடனே மர்ப நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த வழியாக வந்தவர்கள் ராஜிவை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்