< Back
தேசிய செய்திகள்
முதல்-மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்? பீகார் அரசியலில் நீடிக்கும் பரபரப்பு
தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்? பீகார் அரசியலில் நீடிக்கும் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Jan 2024 12:59 PM IST

நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக நாளை பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாட்னா,

பீகாரில், முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளமும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இரு கட்சிகளும் 'இந்தியா' கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன. ஆனால், சமீபகாலமாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதனால், கூட்டணியை விட்டு வெளியேறி, பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆக உள்ளதாகவும் இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமார் இன்று தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு நாளை மீண்டும் முதல்-மந்திரியாக பாஜக ஆதரவுடன் பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ராஷ்டிரிய ஜனதா தளம் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால், பீகார் மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்