பீகாரில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் - நிதிஷ்குமார்
|பீகார் மாநில அரசு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் எஸ்.சி., எஸ்.டி. கணக்கெடுப்பை தவிர ஒட்டுமொத்தமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இயலாது என மத்திய அரசு பதிலளித்தது.
இதைத்தொடர்ந்து பீகாரில் சாதிவாரி கணக்ெகடுப்பு நடத்த மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு ஆளும் ெமகா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தன.
ரூ.500 கோடி செலவு
இந்த நிலையில் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. இதில் முதற்கட்டமாக வருகிற 21-ந்தேதி வரை அனைத்து குடும்பங்களையும் சந்தித்து விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
அடுத்ததாக இரண்டாம் கட்ட கணக்ெகடுப்பு மார்ச் மாதம் தொடங்கும். இதில் மக்களின் சாதிகள், அவற்றின் உட்பிரிவுகள் மற்றும் மதம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். அத்துடன் குடும்பங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களும் சேகரிக்கப்படும்.
வருகிற மே மாதத்துக்குள் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.500 கோடி செலவிடப்படுகிறது.
வரலாற்றுப்பூர்வ நடவடிக்கை
மாநில அரசின் இந்த நடவடிக்கை வரலாற்றுப்பூர்வமானது என துணை முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. ெமகா கூட்டணி அரசின் வரலாற்றுப்பூர்வ நடவடிக்கை இது. அடித்தட்டு பிரிவினர் உட்பட அனைத்து மக்களுக்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவியல் தரவுகளை இந்த கணக்கெடுப்பு மாநில அரசுக்கு வழங்கும்' என தெரிவித்தார்.
பா.ஜனதா ஒரு ஏழை விரோத கட்சி எனவும், சாதிவாரி கணக்கெடுப்பை அந்த கட்சி எப்போதும் எதிர்க்கும் எனவும் கூறிய தேஜஸ்வி யாதவ், இப்போதும் இது தொடர்பாக விமர்சனங்களை வைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் என முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் கூறியிருந்தார்.