< Back
தேசிய செய்திகள்
பீகார்: நச்சு வாயுவை சுவாசித்த 7 மாணவர்கள் மயக்கம்
தேசிய செய்திகள்

பீகார்: நச்சு வாயுவை சுவாசித்த 7 மாணவர்கள் மயக்கம்

தினத்தந்தி
|
21 Nov 2022 6:59 PM IST

பீகார் அரசுப் பள்ளியில் நச்சு வாயுவை சுவாசித்த 7 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

பாட்னா,

பீகார் அரசுப் பள்ளியில் நச்சுவாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

நகர் தானா சவுக்கில் அமைந்துள்ள சிபிஎஸ் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகிலுள்ள நிலக்கரி கிடங்கில் கச்சா நிலக்கரி எரிக்கப்பட்டதால் வெளியான நச்சு வாயுவை மாணவர்கள் சுவாசித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்