< Back
தேசிய செய்திகள்
பீகார்: எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் என்ஜினில் இருந்து கழன்றன
தேசிய செய்திகள்

பீகார்: எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் என்ஜினில் இருந்து கழன்றன

தினத்தந்தி
|
2 Feb 2023 12:02 PM IST

பீகாரில் சத்யகிரஹா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென்று என்ஜினில் இருந்து கழன்றுள்ளன.



பாட்னா,


பீகாரில் முசாபர்பூர்-நர்காத்லகாஞ்ச் ரெயில்வே பிரிவுக்கு உட்பட்ட பெட்டையா மஜவுலியா ரெயில் நிலையம் அருகே சத்யகிரஹா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென்று என்ஜினில் இருந்து கழன்றுள்ளன. இதனால், அந்த பெட்டிகள் வழியிலேயே நின்று விட்டன. இதனை அறிந்த ரெயிலில் இருந்த பயணிகள் அலறினர்.

இதுபற்றிய தகவல் அறிந்து கிழக்கு மத்திய ரெயில்வே அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் நிலைமையை சரிசெய்து வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, ரெயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், சில மணிநேரம் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்