< Back
தேசிய செய்திகள்
பீகார்:  100 கிலோ இரும்பு கொள்ளை; 2 பேரை கம்பத்தில் கட்டி, மயக்கம் வரும் வரை அடித்த கும்பல்
தேசிய செய்திகள்

பீகார்: 100 கிலோ இரும்பு கொள்ளை; 2 பேரை கம்பத்தில் கட்டி, மயக்கம் வரும் வரை அடித்த கும்பல்

தினத்தந்தி
|
14 Nov 2022 7:59 AM IST

பீகாரில் இரும்பு கூடாரம் அமைக்க வைத்திருந்த இரும்பு துண்டுகளை கிலோ கணக்கில் திருடிய 2 பேரை கம்பத்தில் கட்டி வைத்து கும்பல் அடித்து உள்ளது.


பாட்னா,


பீகாரின் முசாபர்பூர் நகரில் பாலம் ஒன்றின் அருகே பல இரும்பு கூடாரங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பெரிய அளவில் இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு கூடாரம் அமைக்கும் பணியில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரையிலான இரும்பு துண்டுகள் திருடப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கும்பல் ஒன்று கவனித்து உள்ளது. அவர்களை துரத்தி உள்ளது. கும்பலை கண்டதும் 2 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

இதன்பின் அவர்களை விரட்டி பிடித்து, இழுத்து வந்த கும்பல் கம்பம் ஒன்றில் கட்டி வைத்து அடித்து, உதைத்து உள்ளது. இதில், அவர்கள் மயக்கமடைந்து உள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவும் எடுக்கப்பட்டு உள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். எனினும், தகவல் கிடைத்து ஒரு மணிநேரம் கழித்தே போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர் என்றும் கூறப்படுகிறது.

இரும்பு திருடியவர்கள் இரண்டு பேரும் முசாபர்பூர் நகரை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்