< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
5 நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகை
|13 March 2024 1:58 PM IST
5 நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகிறார்.
டெல்லி,
பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அதன் பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கோ நாளை இந்தியா வருகிறார்.
டெல்லி வரும் ஷேரிங் டோப்கோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதேபோல், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் டோப்கோ சந்தித்து பேசுகிறார்.
5 நாள் பயணமாக இந்தியா வரும் டோப்கோ தனது பயணத்தின்போது மும்பைக்கும் செல்கிறார். டோப்கேவுடன் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகிறது.
"இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு கொண்டு இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.