< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
போபால்-டெல்லி வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
|1 April 2023 4:30 PM IST
நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்றுள்ள பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லி-போபால் இடையேயான நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் சேவை மத்திய பிரதேச மாநிலம் ராணி கம்லாபதி ரயில் நிலையம் முதல் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.