< Back
தேசிய செய்திகள்
ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை - பா.ஜ.க. சாடல்

கோப்புப்படம் ANI

தேசிய செய்திகள்

'ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை' - பா.ஜ.க. சாடல்

தினத்தந்தி
|
8 Sept 2022 6:26 AM IST

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், "இது ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை ஆகும். ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திக்கும் நேரத்தில், குடும்பத்தின், கட்சியின் அரசியல் பரப்பு சுருங்கி வருகிறது. இது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதல்ல. அவரை (ராகுல்) ஒரு தலைவராக உருவாக்குவதற்கான முயற்சி" என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்