< Back
சினிமா செய்திகள்
மனிதக் கட்டுப்பாட்டையும்  தாண்டியது : 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த  சோனு சூட் வேண்டுகோள்..!
சினிமா செய்திகள்

"மனிதக் கட்டுப்பாட்டையும் தாண்டியது ": 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த சோனு சூட் வேண்டுகோள்..!

தினத்தந்தி
|
14 Jan 2024 9:26 PM IST

விமான நிலைய ஊழியர்களிடம் பயணிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை,

குளிர் காலநிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக நாடு முழுவதும் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சில மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விமான நிலைய ஊழியர்களிடம் பயணிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

" வானிலை மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது . நான் 3 மணிநேரமாக விமான நிலையத்தில் பொறுமையாகக் காத்திருந்தேன். இது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் விமான நிலைய ஊழியர்களிடம் அனைவரும் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள். சில சமயங்களில் அவர்களுடன் சிலர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் காட்சிகளை நான் பார்க்கிறேன்.

சில சூழ்நிலைகள் யாருடைய கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்,என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்