< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடுவானில் பெங்களூரு விமானத்தில் கோளாறு : ஐதராபாத்தில் அவசரமாக தரையிறங்கியது
|5 April 2023 12:16 AM IST
நடுவானில் பெங்களூரு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஐதராபாத்தில் அவசரமாக தரையிறங்கியது.
புதுடெல்லி,
பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் (6இ897) நேற்று உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியை நோக்கி புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த விமானி, உடனடியாக ஐதராபாத் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அங்கு அவசரமாக தரையிறங்க அனுமதி பெற்றார்.
அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை அவர் அவசரமாக ஐதராபாத்துக்கு திருப்பி, அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறக்கினார். பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், வாரணாசி செல்ல வேண்டிய பயணிகளுக்கு மாற்று விமானத்துக்கு இண்டிகோ நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்தது.
இருப்பினும் இண்டிகோ விமானம், ஐதராபாத்தில் அவசரமாக தரையிறங்கியதால் அதன் பயணிகள் மத்தியில் ஒருவிதமான பதற்றம் நிலவியது.