< Back
தேசிய செய்திகள்
ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர், உதவியாளர் கைது; லோக் அயுக்தா போலீசார் அதிரடி
தேசிய செய்திகள்

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர், உதவியாளர் கைது; லோக் அயுக்தா போலீசார் அதிரடி

தினத்தந்தி
|
13 Sept 2022 3:55 AM IST

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர், உதவியாளர் கைது செய்து லோக் அயுக்தா போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றுடன் ஊழல் தடுப்பு படை முடிவுக்கு வந்தது. நேற்று முதல் லோக் அயுக்தா முழு அதிகாரத்துடன் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஒருநபர் தனது சொத்து ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி, மல்லேசுவரத்தில் உள்ள மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அந்த நபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி மேற்கு மண்டல இணை கமிஷனர் சீனிவாஸ் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுபற்றி லோக் அயுக்தாவில் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் அளித்த

அறிவுரையின்பேரில் அந்த நபர் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை தனது உதவியாளர் உமேஷ் மூலம் இணை கமிஷனர் சீனிவாஸ் பெற்றார். அப்போது லோக் அயுக்தா போலீசார் இணை கமிஷனர் சீனிவாஸ், அவரது உதவியாளர் உமேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்