< Back
தேசிய செய்திகள்
உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு-  ஆய்வில் தகவல்
தேசிய செய்திகள்

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு- ஆய்வில் தகவல்

தினத்தந்தி
|
17 Aug 2022 2:38 AM IST

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வு நடத்தியது. அதுதொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. ஆய்வில் உலகின் 6 சிறந்த நகரங்கள் பட்டியலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்