< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்த மழைநீர் - ரூ. 2.5 கோடி மதிப்புள்ள தங்கம் அடித்துச் செல்லப்பட்டது
|27 May 2023 1:53 AM IST
பெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்த மழைநீர் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்த மழைநீர் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் தரைமட்டத்திற்கு கீழே கட்டப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த மழைநீர் அங்கிருந்த தங்க நகைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சென்றன.
இதில் கடையில் இருந்த சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், மரச்சாமான்களும் அடித்து செல்லப்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய நகைக்கடை உரிமையாளர், பருவமழையின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.