< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெங்களூரு: விமானப்படை தளத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு அசைவ உணவு விற்க தடை
|28 Jan 2023 2:36 PM IST
விமான கண்காட்சியை முன்னிட்டு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு அருகே எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 'ஏரோ இந்தியா' விமான கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விமானப்படை தளத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு அசைவ உணவு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மீன், கோழிக்கறி உள்ளிட்ட இறைச்சி விற்கும் கடைகள் வரும் ஜனவரி 30-ந்தேதி முதல் பிப்ரவரி 2 -ந்தேதி வரை கண்டிப்பாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்காக விடப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறுவோர் மீது விமாப்படை விதிப்படி நடவிடக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.