< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மே.வங்கம்: தேசிய பூங்காவில் திடீரென சுற்றுலா பயணிகளை விரட்டிய காண்டாமிருகங்கள்.. அதிர்ச்சி சம்பவம்
|26 Feb 2023 5:58 PM IST
திடீரென அவர்களை காண்டாமிருகங்கள் துரத்தியதால், அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை பின்னோக்கி ஓட்டி சென்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளை காண்டா மிருகங்கள் விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், காண்டாமிருகங்களை புகைப்படம் எடுக்க முயன்றனர்.
திடீரென அவர்களை காண்டாமிருகங்கள் துரத்தியதால், அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை பின்னோக்கி ஓட்டி சென்றனர். அதில் ஜீப் பள்ளத்தில் விழுந்ததில் வாகனத்தில் இருந்த 7 பேர் காயமடைந்தனர்.