< Back
தேசிய செய்திகள்
ஆன்லைன் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்.!
தேசிய செய்திகள்

ஆன்லைன் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்.!

தினத்தந்தி
|
26 Nov 2023 1:00 AM IST

தப்பியோடிய பரிமலை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜாய்நகருக்கு அருகே பரிமல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அபர்ணா, சமூக வலைதளங்களை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். தனது மனைவி சமூக வலைதளத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்ததும், சமூக வலைதளத்தின் மூலம் அதிக நண்பர்களை தனது மனைவி கொண்டுள்ளதும் பரிமலுக்கு பிடிக்கவில்லை. இதனால், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதையும், ஆன்லைன் நண்பர்களிடம் பழகுவதையும் நிறுத்துமாறு அபர்ணாவிடம் பரிமல் கூறி வந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் -மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இதே காரணத்திற்காக நேற்றும் இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த பரிமல், காய்கறி மற்றும் இறைச்சியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அபர்ணா சரிந்தார். இதையடுத்து பரிமல் அந்த இடத்தை விட்டு தப்பியோடினார்.

சிறிது நேரம் கழித்து தம்பதியின் மைனர் மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், அபர்ணாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தப்பியோடிய பரிமலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்