< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 5 பேர் பலி
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 5 பேர் பலி

தினத்தந்தி
|
7 Oct 2024 3:59 PM IST

மேற்கு வங்காளத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணமுடியாத அளவில் உடல்கள் சிதறிபோனதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இதுவரை நாங்கள் 5 பேர் உடல்களை மீட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்