< Back
தேசிய செய்திகள்
காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம்; விரக்தியில் மைனர் காதலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம்; விரக்தியில் மைனர் காதலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தினத்தந்தி
|
11 Dec 2022 2:49 PM IST

ராஜஸ்தானில் வேறொரு நபருடன் காதலிக்கு திருமணம் நடந்த விரக்தியில் மைனர் காதலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.



ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் யாஷ் வியாஸ் (வயது 17). இவர் படித்து வந்த அதே பள்ளியில் படித்து வரும் மாணவியுடன் காதல் வசப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவிக்கு வேறொருவருடன் திடீரென்று திருமணம் நடந்து விட்டது. இதுபற்றி அறிந்ததும், யாஷ் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதனால், சில நாட்களாக யாருடனும் சரிவர பேசாமல் வருத்தத்துடனேயே காணப்பட்டார்.

எனினும், அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், தனது சமூக வலைதள பக்கத்தில், காதலியின் திருமண விசயம் அறிந்து வேதனையடைந்தேன் என பதிவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், திடீரென மகாத்மா காந்தி மருத்துவமனையில் இரவு வேளையில் துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளன. இதனை கவனித்த அந்த வழியே போனவர்கள் உடனடியாக, பதற்றத்துடன் மைனர் சிறுவனை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

இதன்பின்பு உயர் சிகிச்சைக்காக உதய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்