< Back
தேசிய செய்திகள்
8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி
தேசிய செய்திகள்

8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
11 Sept 2022 8:28 PM IST

கலகட்டகி அருகே, 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த தம்பதிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா கம்பியாபூர் கிராமத்தை சோ்ந்தவர் மயிலாரப்பா. இவரது மனைவி ரத்னா. அந்த தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் அவர்கள் பல ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தும் எந்த பயனும் இல்லை என தெரிகிறது.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தம்பதிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவர்கள் இருவரும் சோ்ந்து விஷம் குடித்து தற்ெகாலைக்கு முயற்சித்துள்ளனர். அப்போது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு கல்கட்டகியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து உப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்கட்டகி புறநகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்