< Back
தேசிய செய்திகள்
எனது அனைத்து சொத்துக்களையும் வெகுமதியாக அளிப்பேன், ஆனால்..! நுபுர் சர்மாவுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்ட நபர்
தேசிய செய்திகள்

எனது அனைத்து சொத்துக்களையும் வெகுமதியாக அளிப்பேன், ஆனால்..! நுபுர் சர்மாவுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்ட நபர்

தினத்தந்தி
|
5 July 2022 10:34 AM GMT

அஜ்மேர் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சொத்துக்களை வெகுமதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை சேர்ந்த ஒருவர், நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை வெகுமதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

வீடியோ பதிவிட்ட அந்த நபர் சல்மான் சிஷ்டி என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை யாரேனும் கொண்டு வருபவர்களுக்கு தனது வீட்டையும், சொத்தையும் தருவதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

அவர் வீடியோவில் கூறியதாவது, "குவாஜா சாஹேப் மற்றும் முகமது சாஹேப் ஆகியோரின் பெருமைக்கு பாஜக தலைவர் நுபுர் சர்மா துரோகம் இழைத்து விட்டார்.

அத்தகைய சூழ்நிலையில், அவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு நான் எனது வீட்டையும் நிலச் சொத்தையும் கொடுப்பேன்.நாடு முழுவதும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள்" என்று அவர் வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வானின் அறிக்கை வெளியாகியுள்ளது. "இந்த வீடியோ தொடர்பாக காவல்துறை நிர்வாகத்தின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பானது, வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் காணப்படுகிறார்.

இது தொடர்பாக, தர்கா மற்றும் அஞ்சுமான் அதிகாரிகளிடமும் போலீசார் பேசி, இந்த வீடியோ வைரலாவதை தடுக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட சல்மான் சிஷ்டி தர்கா காவல் நிலைய பகுதியில் வசிப்பவர், போலீசார் சல்மானை தேடி வருகின்றனர். விரைவில் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்