< Back
தேசிய செய்திகள்
2024 பொதுத் தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்: கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி கருத்து

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

2024 பொதுத் தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்: கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி கருத்து

தினத்தந்தி
|
14 May 2023 12:08 AM IST

2024 பொதுத் தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளதாக கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ந்தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், தேர்தலில் பா.ஜ.க. தேல்வி அடைந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, கர்நாடக முதல்-மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, "தென் மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். வெற்றி பெற்றவர்களுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். குமாரசாமியும் சிறப்பாகச் செயல்பட்டார். சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத் தேர்தல்கள் வரவிருக்கின்றன, இரண்டு தேர்தல்களிலும் பாஜக தோல்வியடையும் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில், 36 ஆண்டுகளுக்கு பின்னர் 137 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தனி பெரும் கட்சியாக கர்நாடகாவில் உருவெடுத்து இருக்கிறது.

இதனிடையே இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒட்டு மொத்த தேசத்திலும் ஒரு புதிய ஆற்றல் வெளிப்பட்டு உள்ளது என்றும், தென் இந்தியாவில் பா.ஜ.க.விக்கு முக்தி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்