< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை வாழ்த்து
|20 May 2023 4:43 PM IST
கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு முன்னாள் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் பெங்களூருவில் முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர்.
அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு முன்னாள் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
"கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு வாழ்த்துக்கள். கர்நாடக மக்களின் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.