< Back
தேசிய செய்திகள்
காங்கிரசை குப்பை தொட்டியில் வீச வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்
தேசிய செய்திகள்

காங்கிரசை குப்பை தொட்டியில் வீச வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்

தினத்தந்தி
|
18 March 2023 3:20 AM IST

காங்கிரசை குப்பை தொட்டியில் வீச வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

துமகூரு:

காங்கிரசை குப்பை தொட்டியில் வீச வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக வளர்ச்சி

துமகூரு சிக்கநாயக்கனஹள்ளியில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது-

கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்த முக்கிய நகரமாக துமகூரு திகழ்கிறது. கர்நாடகத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் நகரம் துமகூரு. எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் முதல்கட்ட நீர் வருகிற ஜூன் மாதத்திற்கு துமகூருவுக்கு கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளோம். நடுத்தர மக்கள் மாதம் 70 முதல் 80 யூனிட் மின்சாரத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

மதிப்பு கிடையாது

ஆனால் மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் சொல்கிறது. காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது. வாக்குறுதி உத்தரவாத அட்டையை காங்கிரசார் வழங்குகிறார்கள். இதற்கு எந்த மதிப்பும் கிடையாது. மக்களிடம் காங்கிரசை அறிமுகம் செய்து கொள்வதற்காக இந்த உத்தரவாத அட்டையை வழங்குகிறார்கள்.

அந்த அட்டையை பெண்கள் வாங்கி குப்பை தொட்டியில் போட்டுள்ளனர். அந்த அட்டையை பெற்று ஊறுகாய் கூட போட முடியாது. வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசை குப்பை தொட்டியில் வீச வேண்டும். மீண்டும் ஒரு முறை பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

மேலும் செய்திகள்