< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் மோடி சுனாமி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் மோடி சுனாமி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

தினத்தந்தி
|
14 March 2023 3:33 AM IST

கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்ைம தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்ைம தெரிவித்துள்ளார்.

மோடி சுனாமி

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர். அவர் இந்தியாவை உயர்ந்த நிலையில் நிறுத்தியுள்ளார். சர்வதேச எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழை மக்களுக்கு மோடி உதவினார். நானும், மந்திரி சோமண்ணாவும் பழைய நண்பர்கள். நாங்கள் உப்பள்ளியில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதிக்கவில்லை. சோமண்ணா எங்கள் கட்சியை விட்டு விலக மாட்டார். கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

6 முறை வருகை

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதை வைத்து மாநிலத்தில் மோடி சுனாமி ஏற்பட்டுள்ளதாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்