பெங்களூருவில் இன்று ராஜ்யோத்சவா விழா
|கர்நாடக மாநிலம் உதயமான ராஜ்யோத்சவா விழா பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றுகிறார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உதயமான ராஜ்யோத்சவா விழா பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றுகிறார்.
ராஜ்யோத்சவா விழா
கர்நாடகம் உதயமான தினம் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடக உதயமான ராஜ்யோத்சவா விழா மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
கன்னட வளர்ச்சித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.
கலை நிகழ்ச்சிகள்
இதில் கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார், பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. போலீசாரின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
இந்த ராஜ்யோத்சவா விழாவையொட்டி கன்டீரவா விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டங்களில் மந்திரிகள்...
அதே போல் அனைத்த மாவட்ட தலைநகரங்களிலும் ராஜ்யோத்சவா விழா நடக்கிறது. இதில் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளனர். அங்கும் போலீசாரின் அணிவகுப்பு, பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.