< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பேனர் வைப்போர் மீது புகார் அளிக்கலாம்
|17 Nov 2022 12:15 AM IST
பேனர் வைப்போர் மீது புகார் அளிக்கலாம் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூருவில் உள்ள சாலைகளில் பிளக்ஸ், பேனர்கள் வைப்போர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநகராட்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். நகரில் பிளக்ஸ், பேனர்கள் வைப்போர் பற்றி பொதுமக்களுக்கு தெரியவந்தால், அதுபற்றி உடனடியாக மாநகராட்சியிடம் மக்கள் புகார் அளிக்கலாம். அதன்பேரில், நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் உள்ள பிளக்ஸ், பேனர்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்', என்றார்.