< Back
தேசிய செய்திகள்
8 இளம்பெண்களுடன் உல்லாசமாக சுற்றிய வங்கி மேலாளர்
தேசிய செய்திகள்

8 இளம்பெண்களுடன் உல்லாசமாக சுற்றிய வங்கி மேலாளர்

தினத்தந்தி
|
30 Jun 2022 2:10 AM IST

வங்கி மேலாளர் வாடிக்கையாளரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி அதன்மூலம் ரூ.௫.௭௦ கோடி கடன் பெற்று ௮ இளம்பெண்களுடன் உல்லாசமாக சுற்றிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு

பெங்களூரு அனுமந்தநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஹரிசங்கர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். அதே வங்கியில் ஒரு பெண் ரூ.1 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்திருந்தார். அந்த டெபாசிட் மூலமாக, அவரது பெயரில் போலி கணக்கு தயாரித்து ரூ.5.70 கோடியை ஹரிசங்கர் கடனாக பெற்று மோசடி செய்திருந்தார். இதுதொடா்பாக அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசங்கரை கைது செய்துள்ளனர். அவரிடம் முதலில் நடத்திய விசாரணையில், ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்வதற்காகவும், அவர் கேட்டதால் ரூ.5.70 கோடியையும் அனுப்பி வைத்தாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில், ஹரிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ஹரிசங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் கேரளாவில் உள்ளார். இந்த சந்தா்ப்பத்தில் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக முதலில் ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளார். அந்த இளம்பெண் மூலமாக மேலும் 7 பேரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண்கள் கேட்கும் போதெல்லாமல் ஹரிசங்கர் பணம் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, ஒட்டு மொத்தமாக 8 இளம்பெண்களுடன் டேட்டிங் செய்து உல்லாசமாக சுற்றி, அவர்கள் 8 பேருக்கும் ரூ.5.70 கோடியை ஹரிசங்கர் அனுப்பி வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்