< Back
தேசிய செய்திகள்
வங்கியில் கடன் வாங்கி மோசடி: முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை
தேசிய செய்திகள்

வங்கியில் கடன் வாங்கி மோசடி: முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
9 Aug 2023 12:15 AM IST

வங்கி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

பெங்களூரு கன்டோன்மெண்ட் பகுதியில் 'யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியா' வங்கி உள்ளது. இந்த வங்கியில் புதிதாக நிறுவனம் தொடங்குவதற்காக தனியார் நிறுவனம் ரூ.16 கோடி கடன் பெற்றது. ஆனால் அந்த நிறுவனம் எந்தவொரு நிறுவனத்தையும் தொடங்காமல் பணத்தை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட சிலருக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தெரிந்தது. இதில் வங்கியின் முன்னாள் மேலாளருக்கும் தொடர்பு இருந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது அவர், வங்கியின் முன்னாள் மேலாளர் தனஞ்ஜெய் ரெட்டிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தார். மேலும் ரியல் எஸ்டேட் அதிபர் சத்யநாராயணுக்கு 4 ஆண்டு சிறை தண்டையும், ரூ.12 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்