< Back
தேசிய செய்திகள்
மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் கைது
தேசிய செய்திகள்

மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் கைது

தினத்தந்தி
|
24 Feb 2024 5:03 PM IST

கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே மும்பைக்கு வந்த அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பை,

வங்காள தேசத்தை சேர்ந்த சிலர் மும்பை விக்ரோலி பார்க் சைட் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு தங்கி இருந்த 3 பேரிடம் விசாரணை போலீசார் நடத்தினர். அப்போது அவர்கள் யூசுப் சோக்பான் (வயது58), மொமினுல்லா சேக் (52), உமெதுல்லா நூருல் ஹக் (69) எனவும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

யூசுப் சோக்பான் கடந்த 2020-ம் ஆண்டு மும்பைக்கு வந்ததும், உமெதுல்லா நூருல் ஹக் கடந்த 25 ஆண்டுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்து மும்பையில் சட்டவிரோதமாக வசித்து வருவதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அப்பகுதியில் மேலும் சில வங்க தேசத்தினர் தங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளதால் அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்