< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: ஹூக்ளி ஆற்றில் மூழ்கிய வங்கதேச சரக்கு கப்பல்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: ஹூக்ளி ஆற்றில் மூழ்கிய வங்கதேச சரக்கு கப்பல்

தினத்தந்தி
|
26 Feb 2023 1:58 AM IST

மேற்கு வங்காளத்தில் வங்காளதேச சரக்கு கப்பல் ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றில் வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியது.

இதில் கப்பலின் ஒரு பகுதி உடைந்து ஆற்றில் மூழ்கியது. இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சரக்கு கப்பலில் இருந்த 9 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அடர்ந்த மூடுபனியால் இந்த சம்பவம் நிகழ்ததாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிசிந்தாபூரில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்