வங்காள தேச எம்.பி. கொல்கத்தாவில் மாயம்
|வங்காள தேச எம்.பி. அன்வருல் அசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக 12ம் தேதி கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.
கொல்கத்தா,
கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ சிகிச்சைக்கு வந்த வங்காள தேச (அவாமி லீக் கட்சி) எம்.பி.,யான அன்வருல் அசிம் அனார், சிகிச்சைக்கு பிறகு காணாமல் போனதாக கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வங்கதேசத்தின் ஆளும் அவாமி லீக்கின் எம்.பி.,யான அன்வருல் அசிம் அனார், கடந்த 13-ம் தேதி முதல் காணவில்லை என்றார்.
அனார் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி அன்று கொல்கத்தாவுக்கு வந்து, பாராநகரில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். 13-ம் தேதி ஒருவரைச் சந்திக்கச் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி அவரது நண்பர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் எனக் கூறினார்.
கடந்த 8 நாட்களாக அனார் காணாமல் போயிருந்த நிலையில், அவர் புதுடெல்லிக்கு சென்றுவிட்டதாக அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவரின் தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. நாங்கள் காவல்துறை மற்றும் உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.